Sunday, August 3, 2008

கிறுக்கல் - கடல் வாழ்த்து

அழகிய காலைப் பொழுதினிலே
ஆதவன் மெதுவாய் எழுகையிலே
நீல ஆடை தானுடுத்தி
பொலிவுடன் சிரிக்கிறாள் கடல் அன்னை !

தன்னிடம் வரும் பிள்ளைகளை
அன்புக்கரம் (அலை) தான் நீட்டி
பிள்ளைகள் கவலைகள் தான் மறக்க
பரிவுடன் தொடுகிறாள் கடல் அன்னை !

உப்புத் தண்ணீர் கொண்டாலும்
உள்ளுக்குள் உயிர்களை தாங்கிடுவாள்
அயாரது அடித்திடும் அலைகளின் மூலம்
உழைப்பின் உன்னதம் உணர்த்திடுவாள்

அன்னையின் சிரிப்பொலி கேட்டதுமே
மனதினில் அமைதியும் பிறந்திடுதே
ஆயிரம் கோடி பிள்ளைகள் நெஞ்சத்தை
ஆட்கொண்ட கடல் அன்னை என்றும் வாழியவே !

- புலவர் புன்னாக்குதாசன்

கிறுக்கல் - கற்பனை காதலி - 1

கற்பனை காதலி

பேருந்தில் என்னுடன் பயணிக்கும் பைங்கிளி
இந்த கோழையின் உள்ளத்தை தாக்கியது உன் விழி !

தாக்குதலின் வலியால் தடம் புரண்டு நின்றேன்

உன் மலர்ப் பாதம் சொல்லும் வழி பின் தொடர்ந்து வந்தேன் !

உன்னை கண்டு விட்ட நாட்களெல்லாம் இனிமையாய் செல்லும்
காணாத நாட்களோ ஈட்டிபோல் கொல்லும்!

நீ பேசினால் கேட்பதோ மகிழ்ச்சி எனும் கீதம்
உன் தினசரி தரிசனம் கிடைத்து விட்டால் போதும் !

என் அன்பின் ஆதங்கம் அறியாப் பெண்ணே
என் விழிகளின் வழ்யினில் என் காதல் அறிவாய் கண்ணே !

- புலவர் புண்ணாக்குதாசன்