Monday, June 16, 2008

கவிதை - காதல் தோல்வி!

என் காதலை சொல்லிட வார்த்தைகள் தேடினேன்
வார்த்தைகள் வரும் முன்னே வட்ட நிலா மறைந்தது !

குழந்தையை போல் சிரித்தாள்
என் உள்ளத்தை சிறை பிடித்தாள்
இன்று சிறகடித்து பறந்தாள் !

அண்டை நாட்டில் அவள் இருந்த போதிலும்
என் மனதருகில் தான் இருந்தாள் என்றிருந்தேன்
இன்று தாய் நாடு திரும்பி சென்றாள்
என் மனம் தண்ணீரில் தத்தளிப்பதை போலுணர்ந்தேன் !

கனவுலகில் கட்டினேன் காதல் கோட்டை
கனவு கலைந்த பின் விழுந்தது நெஞ்சில் ஓர் ஓட்டை !

என் இதய கோவிலின் சிம்மாசனத்தில் இருந்தாள்
இன்று அவள் இறங்கி சென்றதும் என் இதயம்
கோபுரம் இல்லா கோவில் ஆனது !

என் வீட்டில் விளக்கேற்ற வருவாள் என நினைத்தேன்
இன்று எண்ணை இல்லா விளக்குத்திரியாக
என்னை எரிய விட்டு சென்று விட்டாள் !

கருப்பு சட்டைக்காரி காதலுக்கு கெட்டிக்காரி !
என் இரும்பு இதயத்தை துரும்பாக்த துகழ்த்து விட்டாள் !

நீ இம் என்றால் சிந்து கவி பாடுவேன் !
நீ இல்லை என்றால் அடுத்த பெண்ணை தேடுவேன் !

-புலவர் புன்னாக்குதாசன்

1 comment:

Prasanna said...

Matrum ooru "Kaikilai"

Hope you knew what "Kaikilai" tells us from Sangam Poetry.